ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு குறிக்கோளை அடையவேண்டும் என்றே கல்வி கற்கின்றான், வைத்தியராக வேண்டும் என்று படித்திருப்பார்கள் மற்றவர்களுக்கு உதவியும் செய்திருப்பார்கள் ஆனால் இவர்களுக்கு மத்தியில் இலங்கையில் பிறந்த இளைஞர் ஒருவர் மாறுபட்டு காணப்படுகின்றார்.
இலங்கையில் பிறந்த தினேஷ் பலிபன(32) என்ற இளைஞர் அனைவரிலும் ஒப்பிடுகையில் வித்தியாசமான ஒருவர் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்திய கற்கையை மேற்கொண்டு வந்த போது ஏற்பட்ட விபத்தில் கை, கால்கள் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டார் இந்த இளைஞன்.
பிலிஸ்பேனில் வசிக்கும் அவரது பெற்றோரை சந்திக்க சென்ற போதே இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தினேஷ் பலிபனவின் வைத்திய கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தனது பட்டப்படிப்பை தொடர தீர்மானித்தார்.
வைத்தியராக வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வி நடவடிக்கைகளை கடந்த வருடம் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் தினேஷ் பலிபன ஆரம்பித்தார்.
இதற்கமைய இன்னும் சில மாதங்களில் அவர் தனது வைத்தியப் பட்டப்படிப்பை நிறைவு செய்து Griffith பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்யவுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியப் பட்டம் பெறவுள்ள இரண்டாவது நபர் என்ற பெருமையை இலங்கையில் பிறந்த தினேஷ் பலிபன பெறவுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal