சிம்பு நயாகனாக நடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’, இம்மாதம் 11ம் தேதி வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என படக்குழு முன்பு தெரிவித்தபோதும் படம் வெளியாகவில்லை. அப்போது கெளதம் மேனன் – சிம்பு இருவருக்குமான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது .
தணிக்கை பணிகள் சில தினங்களில் முடிவடையும் என்றும் அதனைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal