பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி ஒருவர் விரைவில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களில் ஒருவராக அர்ச்சனா இடம்பெறுவார் என கூறப்பட்டது. ஆனால் அர்ச்சனா தொகுப்பாளராக பணிபுரியும் சேனல் நிர்வாகம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என தடை போட்டதால் அப்போது அவர் செலவில்லை.
தற்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதால், அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல தயாராகி வருகிறாராம். விரைவில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal