பேஸ்புக் மெசஞ்சரில் புது அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மெசஞ்சரில் அப்படி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை பாதுகாப்பான ஒன்றாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் பேஸ்புக் மெசஞ்சர் செயலிக்கு புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த அப்டேட் ஒரு குறுந்தகவலை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்ய அனுமதிக்கிறது. இவ்வாறு செய்யும் போது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்ட போலி விவரங்கள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை குறைக்க முடியும் என பேஸ்புக் மெசஞ்சரின் ஜே சலிவன் தெரிவித்து இருக்கிறார்.

புது நடவடிக்கை விரைவில் நடைபெற இருக்கும் அமெரிக்க மற்றும் நியூசிலந்து தேர்தல் மற்றும் தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது.
மேலும் கொரோனாவைரஸ் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள கொரோனாவைரஸ் கம்யூனிட்டி ஹப் பயன்படுத்தவும் பயனர்களுக்கு பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது. இதில் கொரோனாவைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை கொண்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal