மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், வலிமை படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூருக்கு நடிகர் அஜித் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
அஜித்குமார் கதாநாயகனாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அஜித், ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார். படத்துக்காக அஜித், 6 பேக் உடற்கட்டுக்கு மாறுகிறார்.
‘வலிமை’ படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அஜித் வேறு ஒரு புதிய படத்தில் நடிக்கப்போவதாக வதந்தி பரவியது.

இதைத்தொடர்ந்து அஜித், போனிகபூரிடம் ஒரு வாக்குறுதி அளித்தார். “வதந்திகளை நம்ப வேண்டாம். ‘வலிமை’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்த படத்தை ஒப்புக்கொள்வேன்” என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் போனிகபூர் நிம்மதி அடைந்திருக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal