இலங்கையில் 9 ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போது வாக்களிப்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நேற்று இடம்பெற்ற தேர்தலின் போது குறித்த நபரின் வாக்கை பிரிதொரு நபர் வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மொனராகல பஞ்ஞானந்த மகா வித்தியாலயாவில் உள்ள வாக்குச் சாவடி நிலையத்தில் வாக்களிக்கச் சென்ற வாக்காளர் ஒருவரின் வாக்குகள் ஏற்கெனவே வாக்களிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்னுடைய வாக்களிக்கப்பட்டுள்ள போதிலும், அதனுடன் சம்பந்தப்பட்ட வாக்கு அட்டை மற்றும் அடையாள அட்டை இன்னும் தனது கையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மாத்தறை தெனியாய ரங்க கனிஷ்ட வித்தியாலத்தில் ஒரு பெண்ணும், அத்திடிய ஆதர்ச கனிஷ்ட வித்தியாலயத்தில் ஒரு ஆணும் இதே சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது.
அவர்கள் வாக்களிக்க வாக்குச் சாவடி நிலையத்திற்குச் சென்ற போது, அவர்களின் வாக்குகளை பிரிதொரு நபரால் வாக்களிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal