பிரபல மராத்தி நடிகையும் பரதநாட்டிய நடனக்கலைஞருமான அஷ்வினி ஏக்போத் நேற்று இரவு புனேவில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
பாரத் நாட்டிய மந்திர் மேடையில் அபாரமாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்த அஷ்வினி ஏக்போத்(44), திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மேடையில் சரிந்து விழுந்ததையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு அஷ்வினியின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
பரத நாட்டியத்தை உயிருக்கும் மேலாக மதித்து வாழ்ந்து வந்த அஷ்வினி பரத நாட்டிய நிகழ்ச்சியின்போதே உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal