நியூசிலாந்து நாட்டில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தங்கள் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்திருந்தார். தொடர்ச்சியாக அந்த நாட்டில் 24 நாட்களாக கொரோனா தொற்று இல்லை. இதனால் ஊரடங்கு நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
இந்நிலையில் இன்று நியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேரும் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர்கள். நியூசிலாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளான இருவரையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal