பொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட அது மட்டும் தான் காரணம் என்று படத்தின் நாயகி ஜோதிகா கூறியுள்ளார்.
ஜே.ஜே. பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ’பொன்மகள் வந்தாள்’ படம் வரும் 29-ந் திகதி அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.
இணையதளத்தில் நேரடியாக வெளியாவது பற்றி ஜோதிகாவிடம் கேட்டதற்கு, இப்போது இந்த கொரோனா ஊரடங்கால் எல்லோருக்குமே இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. படத்தை ரிலீஸ் செய்யும் அமேசான் பிரைமுக்கு 200 நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எனவே சின்ன பட்ஜெட் படங்கள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் போன்றவற்றுக்கு இந்த தளங்கள் ஒரு வரப்பிரசாதம்.
பொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட கொரோனா மட்டும் தான் காரணம். நிலைமை சரியாகும் வரை காத்திருப்பதைவிட மக்கள் பார்வைக்கு கொண்டுவந்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.
Eelamurasu Australia Online News Portal