என்னை மீண்டும் 90களிலேயே கொண்டு சென்று விட்டுவிடுங்கள் – சுவாதி

என்னை மீண்டும் 90களிலேயே கொண்டு சென்று விட்டுவிடுங்கள் என்று சுப்ரமணியபுரம் சுவாதி வருத்தமாக கூறியிருக்கிறார்.

ட்விட்டரில் போலி கணக்குகள் அதிகரித்து வருகிறது. நேற்று காமெடியன் செந்தில் ட்விட்டரில் இணைந்துவிட்டார் என கூறி ஒரு அறிக்கை வைரலானது. ஆனால் அது போலியான ட்விட்டர் கணக்கு என்பது பின்னர் தான் தெரியவந்தது.

இந்நிலையில் சுப்ரமணியபுரம் படம் மூலம் மிகவும் பிரபலமான சுவாதி தனது பெயரில் இருக்கும் போலி ட்விட்டர் கணக்கு பற்றி புகார் கூறியுள்ளார்.

சுவாதி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு

இது பற்றி ஸ்வாதி இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது..

“@SwathiReddyOffl” என்ற ட்விட்டர் ஐடி என்னுடையது அல்ல. நான் ட்விட்டரில் இல்லை. இணையும் எண்ணமும் இல்லை. நான் பேஸ்புக் பயன்படுத்துவது இல்லை. அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் ஒன்று உள்ளது. அதை மற்றொருவர் பார்த்துக்கொள்கிறார்.”

“நான் ஏன் இன்ஸ்டாகிராமில் இன்னும் இருக்கிறேன் என தெரியவில்லை. இதையெல்லாம் கூறுவதற்காக கூட இருக்கலாம். போலி ட்விட்டர் கணக்கு பற்றி என் கவனத்திற்கு கொன்று வந்தவர்களுக்கு நன்றி. அந்த கணக்கு போலியானது என நீங்கள் ரிப்போர்ட் செய்யுங்கள்.”

“போலி கணக்கு, போலி செய்திகள், போலியான உறவுகள், போலியான புகைப்படங்கள். என்னை மீண்டும் 90களிலேயே கொண்டு சென்று விட்டுவிடுங்கள். ஒரு லேண்ட் லைன் இருந்தால் நன்றாக பேசலாம், சிறிய மழை பெய்தாலும் கரெண்ட் கட், quarantine என்றால் தான் மற்றவர்களுடன் பழக நேரம் என்பது இல்லை, ஐஸ் கிரீம் மற்றும் முட்டை பப்ஸ் இருந்தால் போதும் நண்பர்களுடன் இருக்க, தூர்தர்ஷன் மட்டுமே போதுமானதாக இருந்தது” என சுவாதி ரெட்டி தெரிவித்துள்ளார்.