தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘ஆச்சார்யா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு என அந்தந்த மொழிகளில் நன்கொடை வசூல் செய்து வருகிறார்கள்.
தெலுங்குத் திரைப்படத் தொழிலாளர்களுக்காக மட்டும் காஜல் அகர்வால் 2 லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். ஆனால், தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் உள்ள பெப்ஸிக்காக எதுவும் அறிவிக்கவில்லை.
Eelamurasu Australia Online News Portal