கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்த ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன.
ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசாங்கங்கள் மற்றும் ஆரோக்கிய நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன. இரு நிறுவனங்களும் சேர்ந்து ஏபிஐக்களை வெளியிட்டு சிஸ்டம் தக தொழில்நுட்பத்தை கொண்டு காண்டாக்ட் டிரேசிங் செய்ய இருக்கின்றன.
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மே மாத வாக்கில் ஏபிஐ-க்களை வெளியிட இருக்கின்றன. இந்த ஏபிஐ-க்கள் பொது சுகாதார அதிகாரிகள் பயன்படுத்தும் செயலிகள் இயக்கப்படும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ செயலிகள் அந்தந்த ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும்.
வரும் மாதங்களில் இரு நிறுவனங்களும் இணைந்து ப்ளூடூத் சார்ந்து இயங்கும் விரிவான காண்டாக்ட் டிரேசிங் பிளாட்ஃபார்மை உருவாக்கும் பணிகளில் ஈடபட இருக்கின்றன. இரு நிறுவனங்கள் கூட்டணியின் ஒருகட்டமாக ஆப்பிள் மற்றும் கூகுள் தொழில்நுட்ப திட்ட வரைவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றன.