நாட்டுப்பற்றாளர் நாளை முன்னிட்டு தமிழ்த்திறன் போட்டிகள்

தாயகவிடுதலைக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 32வது நினைவு நாளையும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவு நாளையும் ஒன்றுகூடி நினைவுகொள்வதற்கான காலச்சூழல் இல்லாத நிலையில், அனைவரும் தனித்திருந்து, தேசவிடுதலைக்காக தம்வாழ்வை அர்ப்பணித்த நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் உள்ளங்களில் நினைவில் இருத்தி நினைவுகூருமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம்.

கொறானா வைரஸ் என்ற தொற்றுநோய் காரணமாக உலகமே மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றது. எனினும் போராட்டமே வாழ்வாகவும் வாழ்வே போராட்டமாகவும் கடந்துவந்த எமது மக்களின் இந்த துயரநிலையும் கடந்துசெல்லும் என நம்பிக்கையோடு செயற்படுவோம்.

இந்தவேளையில் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளை முன்னிட்டு, வீடுகளில் தனிமைப்பட்டு இருக்கும் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளையோரிடையே தமிழ்த்திறன் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

தமிழ்த்திறன் போட்டி

1. கருப்பொருள்
i. அவுஸ்திரேலியாவின் வரலாறு
ii. அவுஸ்திரேலியாவில் தமிழர்களின் பங்களிப்புகள்
iii. தாயக மக்களுக்கான எமது பங்களிப்புகள்
iv. தமிழர் வரலாறு
v. எனது எதிர்காலம்

2. தெரிவுசெய்யப்படும் தலைப்பில் போட்டியாளர் ஒரு A4 தாள் அளவுக்குட்பட்டதாக கட்டுரையாகவோ கவிதையாகவோ தனது படைப்பை தேர்வு செய்யமுடியும். ஒருவர் ஒரு பிரிவின் கீழ்தான் தனது ஆக்கத்தை சமர்பிக்கமுடியும்.

3. போட்டிக்கு எழுத்தில் சமர்பிக்கப்படும் ஆக்கம் தேர்வுசெய்யப்படுமிடத்து அதனை போட்டிக்கான நாளில் இணையதொடர்பாடல் மூலம் இணைந்து (Zoom ஊடாக அல்லது அதுபோன்ற Remote Conference Service ஊடாக) நேரடியாக காணொளி வடிவில் தேர்வாளர்கள் மத்தியில் பேச்சு வடிவில் படைக்கவேண்டும்.

4. இருபது வயதுக்குட்பட்ட எவரும் போட்டிகளில் பங்குபற்றலாம்.

5. போட்டியில் பங்குபற்றுபவர் அவரது முழுப்பெயர், பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், முகவரி ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

6. போட்டியாளர் குறித்த ஆக்கம் தனது சொந்த படைப்பு என உறுதிப்படுத்தவேண்டும். ஆக்க உருவாக்கத்தின்போது பொருத்தமான உதவிகளை பெற்றோரிடமிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ பெற்றுக்கொள்வது ஏற்புடையது.

7. அனைத்து கட்டுரைகளும் 30 – 04 – 2020 இற்கு முன்பதாக kaanthalbook@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பப்படல் வேண்டும்.

கட்டுரை மற்றும் கவிதை என்ற இரு பிரிவுகளிலும், ஆரம்ப பள்ளி மற்றும் உயர் வகுப்பு மாணவர்கள் என்ற அடிப்படையில், போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் ஆக்கங்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுவதுடன் சிறப்பாக பங்குபற்றுபவர்களுக்கான ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

அவுஸ்திரேலியாவில் வாழும் இருபது வயதுக்குட்பட்ட அனைத்து தமிழ் இளையோரும் இப்போட்டியில் பங்குபற்றுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தொடர்புகளுக்கு:
0401 842 780, 0450 120 818, 0433 002 619, 0469 823 269

இவ்வண்ணம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா