இலங்கைக்கு சென்று வந்த பிரபல தயாரிப்பாளரின் மகளை அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ரா ஒன், தில்வாலே உள்ளிட்ட இந்தி படங்களை தயாரித்தவர் கரீம் மோரானி. இவரது மகள்கள் ஷாஜா, சோயா. இதில் ஷாஜா சமீபத்தில் இலங்கைக்கு சென்று வந்து உள்ளார். இதேபோல சோயா ராஜஸ்தானுக்கு சென்று திரும்பி உள்ளார். இந்தநிலையில் வெளிநாடு மற்றும் வெளியூரில் இருந்து திரும்பியதால் 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஷாஜாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் கரீம் மோரானி கூறுகையில், “சோயாவுக்கு தான் கொரோனா அறிகுறி இருந்தது. ஆனால் சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஆனால் எந்த அறிகுறியும் இல்லாத ஷாஜாவுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. ஷாஜா கடந்த மாதம் முதல் வாரம் இலங்கையில் இருந்து வந்தார். சோயா மார்ச் 15-ந் திகதி ராஜஸ்தானில் இருந்து மும்பை வந்தார் . இவ்வாறு அவர் கூறினார்.
பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Eelamurasu Australia Online News Portal