அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ2020 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பிள் நிறுவனம் தனது குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் மாடலை இம்மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் புதிய ஐபோன் பெயரை ஆப்பிள் தனது வலைதளம் மூலம் ஏற்கனவே தெரியப்படுத்தி விட்டது. குறைந்த விலை ஐபோன் மாடல் ஐபோன் எஸ்இ 2020 என அழைக்கப்பட இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இது ஐபோன் 9 என அழைக்கப்படும் என கூறப்பட்டது. எனினும், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எஸ்இ மாடலுக்கு மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிகிறது. புதிய மாடல் வளரும் நாடுகளை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு இது அவர்களுக்கு முதல் ஐபோனாக இருக்கும் என தெரிகிறது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் பார்க்க ஐபோன் 7 அல்லது ஐபோன் 8 சீரிஸ் போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை 4.7 இன்ச் எல்.சி.டி. பேனல், டச் ஐடி ஹோம் பட்டன், ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் டச் ஐடி பட்டன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக 2016 மார்ச் மாதத்தில் ஐபோன் 5எஸ் மாடலில் புதிய அம்சங்களை சேர்த்து ஐபோன் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வரிசையில் ஐபோன் எஸ்இ 2020 மாடலில் ஐபோன் 11 மாடலில் ஐபோன் 7 ரக அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் மாடல் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதன் விலை 399 டாலர்களில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal