மனோரமா பெயரில் நடிகர் சங்கம் விருது

மனோரமா பெயரில் விருது வழங்கப்படும் என, நடிகர் சங்க துணைத் தலைவர், பொன்வண்ணன் தெரிவித்து உள்ளார். நடிகை மனோரமாவின், முதல் ஆண்டு நினைவு நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் சிவகுமார், பிரபு, ராம்குமார், மனோரமா மகன் பூபதி, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்; மனோரமா படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

பொன்வண்ணன் பேசுகையில், ‛‛முதல்வர் உடல்நலம் பெற்று வந்ததும், நடிகர் சங்கம் சார்பில், மனோரமாவுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும். ஆண்டுதோறும் நடிகர் சங்கம் சார்பில், மனோரமா பெயரில் விருது வழங்கப்படும், என்றார்.