ஸ்ரீலங்கன் விமான சேவை தனது அனைத்து சேவைகளையும் இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 8ஆம் திகதி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இவ்வாறு விமான சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
விமான சேவை துறையில் ஏறப்பட்டுள்ள சந்தையின் நிலை மற்றும் பல்வேறு தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
எனினும், இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர தேவையான சேவையினை வழங்க விருப்பத்துடன் உள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal