தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதை பயன்படுத்தி வீட்டின் சுவற்றில் ஓவியங்கள் வரைவதாக நடிகை மகிமா நம்பியார் தெரிவித்துள்ளார்.
குற்றம் 23 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் மகிமா நம்பியார். புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கிறார். இந்த ஓய்வை நடிகர்-நடிகைகள் பலரும் உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், ஆன்-லைன் வகுப்புகளில் சேர்ந்து படிப்பது என்று ஆக்கப்பூர்வமாக செலவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மகிமா, ஓவியராக மாறி இருக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் இருந்துள்ளது. சினிமாவுக்கு வந்து ஓய்வில்லாமல் நடித்ததால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது ஊரடங்கு விடுமுறையை ஓவியம் வரைய பயன்படுத்துகிறார். தனது வீட்டின் சுவர்களில் ஓவியங்கள் வரையும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகிறது.
அவர் கூறும்போது, “தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதை பயன்படுத்தி ஓவியங்கள் வரைகிறேன். நீங்களும் ஓவியராக மாற ஒரு சுவர், ஒரு பென்சில் பாராட்டுவதற்கு ஒரு அம்மா இருந்தால் போதும்” என்றார்.
Eelamurasu Australia Online News Portal