அவுஸ்ரேலியா நாட்டில் 135 கிலோ உடல் எடையுடன் பல்வேறு அவமானங்களை சந்தித்து வந்த இளம்பெண் ஒருவர் தீவிர முயற்சியால் தற்போது 75 கிலோ எடையுள்ள அழகு பெண்ணாக மாறி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
விக்டோரியா நகரில் நடாலி புர்டினா என்ற 23 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
இவருக்கு 19 வயதில் திருமணம் ஆனதை தொடர்ந்து 20-வது வயதில் கர்ப்பம் அடைந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.
குழந்தை பிறந்தது முதல் அவரது உடல் எடை கூடிக்கொண்டு சென்றுள்ளது. நடாலி குளிர்பானங்கள் மற்றும் கிடைத்த அத்தனை உணவுகளையும் எடுத்துக்கொண்டதால் ஒரு நிலையில் அவரது உடல் எடை 135 கிலோவை எட்டியது.
இதனால் அவரால் விரும்பிய ஆடைகளை உடுத்த முடியவில்லை. பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அவமானங்களை சந்தித்து வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்ட அவர் குளிர்பானங்களை அருந்துவதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளார்.
முன்பு இல்லாத அளவில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்தி வந்துள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும் 2 கி.மீ தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சிக்கு பின்னர் தற்போது நடாலி 60 கிலோ எடையை குறைத்து அழகு தேவதையாக மாறியுள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘உடல் எடையை குறைப்பதற்கு முதலில் உறுதியான எண்ணம் வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொண்டதை தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் குடித்ததால் தான் தற்போது உடல் எடையை குறைத்துள்ளேன்.
இப்போது விரும்பிய் ஆடைகளை உடுத்தவும், ஷொப்பிங் செல்லவும் மகிழ்ச்சியாக உள்ளதாக’ நடாலி உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal