ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன் மாணிக்கவேல் படத்தின் வெளியான திகதி மாற்றப்பட்டுள்ளது.
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக காவல் துறையினர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் நாளை (மார்ச் 6) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் வெளியான திகதி மாற்றப்பட்டுள்ளது. புதிய வெளியான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏற்கனவே இருமுறைவெளியான திகதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal