சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எட்டுத்திக்கும் பற’ ஆணவக் கொலைக்கு எதிரான படம் என அப்படத்தின் இயக்குனர் கீரா தெரிவித்துள்ளார்.
கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “எட்டுத்திக்கும் பற”. வர்ணாலயா சினி கிரியேசன், வி5 மீடியா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் கீரா கூறியதாவது: “எட்டுத்திக்கும் பற” சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது. ‘பற’ என்பதைப் பலரும் சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். அது சாதியத்தின் குறியீடு அல்ல. ‘பற’ என்றால் பறத்தல். விடுதலையின் குறியீடாகவே இந்தத் தலைப்பை வைத்தேன்” என தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal