நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படும்?

19 ஆவது அரசியலமைப்புக்கு அமைய இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் நான்கரை ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் அதனை கலைப்பதற்கான முழுமையான அதிகாரம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு செல்கின்றது.

இதனடிப்படையில் நாளை அல்லது அதற்கு பின்னரான நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலை அடுத்து உருவான தற்போதைய நாடாளுமன்றம் அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி கூடியது .

இதனடிப்படையில் 8வது நாடாளுமன்றத்தின் நான்கரை ஆண்டு கால்ம இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றமையை அடுத்து அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்க செல்கின்றது.

இந்தநிலையில் தமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தாம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார். அத்துடன் தற்போதைய நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையின்மையால் விரைவாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்தராஜபக்ஷவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.