தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, அவர்களுடன் மீண்டும் நடிக்க ஆசை என்று ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் ஆஸ்க் தமன்னா என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ஒரு ரசிகர், ‘எங்க தலயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதேபோல் சூர்யா ரசிகர் ஒருவரும் மீண்டும் சூர்யாவுடன் இணைவது எப்போது என்று கேட்டார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக அஜித்துடன் வீரம் படத்தில் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா, ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…’ என்று பாடி மீண்டும் வாய்ப்பு வந்தால் யார் வேண்டாம் என்பார்கள் என்பது போன்ற பதிலும் அளித்திருக்கிறார். அதேபோல் ‘சூர்யாவுடன் நடிப்பது என்பது எனது கனவு’ என குறிப்பிட்டிருக்கிறார். சூர்யாவுடன் ஏற்கனவே அயன் படத்தில் தமன்னா ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal