ஐ.நா மனித உரிமைகள் சபையில், சிறிலங்கா அரசாங்கத்துக்கு இனியும் கால அவகாசம் வழங்கக் கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சிறிலங்கா விவகாரம் குறித்து, ஐ.நா அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டுமெனவும் கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோமென்று, புதிய அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal