கேரள மாநில அரசின் ஹரித கேரளம் எனப்படும், துாய்மை கேரளா திட்டத்தின் விளம்ப துாதராக, கர்நாடக இசை பாடகர் ஜேசுதாஸ், 76, நியமிக்கப்படுவதாக, அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மாநிலத்தை துாய்மையானதாக மாற்ற, ஹரித கேரளம் என்ற பெயரில், புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.இதன்படி, நீர்நிலைகள், பொது இடங்கள் உள்ளிட்ட, முக்கிய இடங்கள் துாய்மைப்படுத்தப்படும். இந்த திட்டத்தை, மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த, ஜேசுதாசை விளம்பர துாதராக நியமிக்க, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில முதல்வர் பினராயி விஜயன், சட்டசபையில் நேற்று முன்தினம் (3) அறிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal