தமிழ் படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக இந்தி உருவாகும் அத்ரங்கி ரே என்ற படத்துக்கு தயாராகி வருகிறார்.
தனுஷ் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் புதிய இந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்கிறார். தனுஷ் ஜோடியாக பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் நடிக்கிறார்.
அக்ஷய்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ‘அத்ரங்கி ரே’ என்று பெயரிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தமிழிலும் இந்த படத்தை வெளியிடுகிறார்கள். படம் குறித்து அக்ஷய்குமார் கூறும்போது, “கதையை கேட்ட 10-வது நிமிடத்திலேயே நடிக்க ஒப்புதல் சொல்லி விட்டேன். எனக்கு சவாலான கதாபாத்திரம். வாழ்க்கை முழுவதும் இந்த கதாபாத்திரத்தை நினைவில் வைத்திருப்பேன்” என்றார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிக்க தனுஷ் தயாராகி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் முடிந்துள்ளது. பரியேறும் பெருமாள் படத்தை எடுத்து பிரபலமான மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்திலும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் நடந்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பற்றிய கதையாக தயாராகிறது. கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.
Eelamurasu Australia Online News Portal