தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தயார் என நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலித்ததும், பின்னர் பிரிந்துவிட்டதும் அனைவருக்கும் தெரிந்தது தான்.
அவர்கள் காதலர்களாக இருந்தபோது படங்களில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. ஏன் ஏதாவது நிகழ்ச்சிகளில் பார்த்தால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தயார் என்றும், ஆனால் கதையும், இயக்குனரும் வழக்கத்தை விட அற்புதமாக இருந்தால் மட்டுமே நடிப்பதாகவும் ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal