புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு மஹிந்த அறிவுறுத்தல்!

2021 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு இறுதியாக நாட்டில் 2012 இல் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மொத்த மக்கள் தொகை 20,359,439 மற்றும் 5,267,159 வீட்டு அலகுகள் ஆகும்.

1981 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் மக்கள் தொகை 1% ஆண்டு வளர்ச்சி விகிதத்தைக் காட்டியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 28.8% மேல் மாகாணத்திலும், மிகக்குறைய மக்கள் தொகை 5.2% கொண்ட இடமாக வடக்கு மாகாணமும் காணப்படுகின்றன.