கிரீஸின் அதிபராக பெரும்பான்மை ஆதரவுடன் நேற்று (புதன்கிழமை) 63 வயதான கேத்ரினி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்க் கட்சி எம்பிக்கள் ஆதரவுடன் சுமார் 261 பேர் எகடெரினி ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து கிரீஸுன் முதல் பெண் அதிபராகி உள்ளார் கேத்ரினி .
இதனை கிரீஸின் பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் தேசிய தொலைகாட்சியில் அறிவித்தார்.
அதில் அவர் பேசியதாவது, ” அதிபராக பெண் ஒருவரை தேர்ந்தெடுத்து நமது பாரம்பரியத்தை உடைத்துள்ளளோம். மேலும் அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. கிரீஸின் எதிர்காலத்தை திறக்க நேரம் வந்துவிட்டது” என்றார்.
அதிபர் தேர்வு குறித்து எதிர் கட்சி தலைவர் அலெக்ஸி கூறும்போது, “ கேத்ரினி சிறந்த நீதிபதியாக பணியாற்றி உள்ளார். அவர் மனித உரிமைக்காக போராடியவர்” என்றார்.
கிரீஸை பொறுத்தவரை அங்கு அரசாங்கம் மற்றும் சட்டங்களை உறுதி செய்வதற்காக அங்கீகாரம் அதிபரிடம் உள்ளது.
கிரீஸின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேத்ரினி அந்நாட்டின் மூத்த நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal