எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது அவர்தான் – பாடகி பி.சுசிலா

 பிரபல பின்னணி பாடகியான பி.சுசிலா, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது யார் என்ற விவரத்தை கூறினார்.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
விழாவில் பி.சுசிலா
அதன்பின் பாடகி பி.சுசிலா பேசும்போது, ‘எனக்கு என்ன பேசுறது தெரியல, 85 வயதாகி விட்டது. பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள். எனக்கு தமிழ் சொல்லி கொடுத்து ஏவிஎம் மெய்யப் செட்டியார். அதனால் தான் இப்போது தமிழில் பேச முடிகிறது.
எனக்கு தமிழ் பத்திரிகையாளர்கள் அமைப்பின் விழாவில் கலந்து கொள்ள இடம் கொடுத்ததுற்கு நன்றி என்று கூறியதோடு, “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற பாடலை பாடினார். பி.சுசிலா அம்மையார் இது போன்ற பொது நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது. வயது 85 ஆகிவிட்ட நிலையில் பத்திரிகையாளர்கள் சங்க நிகழ்வில் கலந்து கொண்டது சந்தோஷமாக இருப்பதாக கூறினார் பி.சுசிலா.