விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக அறிமுகமான படம் சகாப்தம். விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த அந்த படத்தில் சண்முகப்பாண்டி யனுடன் தேவயானி, சிங்கம்புலி, பவர்ஸ்டார் உள்பட பலர் நடித்தனர். அப்படத்தை சுரேந்தர் இயக்கியிருந்தார். அதையடுத்து உடனடியாக சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதுதான் ஒரு படத்தில் அவர் கமிட்டாகியிருக்கிறார்.
மேலும், தெலுங்குப்பட இயக்குனர் பசீர் இயக்கும் அப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறதாம். முதல் படத்திலேயே காதல், ஆக்சன், காமெடி என அனைத்து ஏரியாக்களிலும் பர்பாமென்ஸ் கொடுத்த சண்முகப்பாண்டியன் இந்த படத்தில் கூடுதலான ஆக்சன் காட்சிகளில் நடிக்கிறாராம். இந்த படத்திற்கான வேலைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிக்கும் பரிட்சயமான முன்னணி நடிகர் நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வருகிறார்கள். இந்த படத்திலும் விஜயகாந்த் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.