எம்.ஜி.ஆர்-மஞ்சுளா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து தயாரித்து,இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 43 வருடங்களுக்கு பிறகு இந்த படம் புது பொலிவுடன் டிஜிட்டலில் விரைவில் வருகிறது.
இதில் மஞ்சுளா, லதா,சந்திரகலா,நாகேஷ்,அசோகன்,மனோகர்,தேங்காய் சீனிவாசன்,நம்பியார், வி.கோபாலகிருஷ்ணன்,மேட்டா ரூங்ராத் (தாய்லாந்து) ஆகியோர் நடித்துள்ளனர்.எம்.எஸ். விசுவநாதன் இசையில் கண்ணதாசன்,புலமைப்பித்தன்,வாலி, புலவர் வேதா ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
ஆர்.எம். வீரப்பன்,சாமி, லட்சுமணன் மூவரும் இணைந்து எழுதிய கதைக்கு சொர்ணம் வசனம் எழுதி உள்ளார்.ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ-70 பொருட்காட்சியிலும், சிங்கப்பூர்,மலேசியா, தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளிலும் படத்தை பிரமாதமாக படமாக்கி இருந்தார் எம்.ஜி.ஆர்.
இதில் 11 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அத்தனையும் ஹிட். பல தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து ஓடிய இந்த படத்தை ரிஷீஷ் மூவிஸ் சார்பில் நாகராஜ் டிஜிட்டலில் வெளியிடுகிறார்.
Eelamurasu Australia Online News Portal