உலகின் பிரபல விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை இதுதான்!

உலக தொழில்நுட்ப சந்தையில் பிரபலமாக விளங்கும் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைகளின் பயன்பாடு உலகம் முழுக்க பிரபலமாகி வருகிறது. இந்த சேவையை வழங்குவதில், ஆப்பிள், கூகுள் மற்றும் அமேசான் போன்றவை முன்னணி பிராண்டுகளாக அறியப்படுகின்றன. இந்நிறுவனங்களின் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைகள் பெரும்பாலான தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
எனினும் ஆப்பிள் சிரி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா என மூன்று சேவைகளில் பிரபலமானவை எது என்ற கேள்விக்கு தற்சமயம் விடை கிடைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில் ஆப்பிள் நிறுவனத்தின் சிரி சேவையே பிரபலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் சிரி
உலகம் முழுக்க விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவையை பயன்படுத்துவோரில் ஆப்பிள் சிரி 35 சதவீத பங்கு வைத்திருக்கிறது. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கார்டனா சேவை இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது. இந்த சேவையை 22 சதவீத பங்கு கொண்டிருக்கிறது. கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்றவை முறையே 9 மற்றும் 4 சதவீத பங்கு கொண்டிருக்கிறது.
பட்டியலில் சிரி முதலிடம் பிடிக்க ஐபோன், புதிதாக வெளியான ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றவையே காரணம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி சேவை 2011 ஆம் ஆண்டு முதல் வெளியாகி வரும் ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டு வருகிறது. மைக்ரோசாஃப்ட் கார்டனா சேவை விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் வழங்கப்பட்டுள்ளது.
சிரி மற்றும் கார்டனா போன்ற சேவைகள் உலகம் முழுக்க பெரும்பாலான சாதனங்களில் வழங்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் மற்ரும் அமேசான் உள்ளிட்ட சேவைகள் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.