தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இது என்ன மாயம் படம் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இப்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் அஜய் தேவகன் மனைவியாக, நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு பகுதியை பேசும் சினிமா. இது, எந்த குறிப்பிட்ட மொழி மற்றும் பகுதியைச் சேர்ந்த படம் இல்லை.

ஆனால், உலகம் அறிந்து கொள்ள வேண்டிய படம். சவாலான கேரக்டர்களை தேர்வு செய்தே நடித்து வருகிறேன். எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை இது’ என்று கூறியிருந்தார்.
Eelamurasu Australia Online News Portal