தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, தனது மகனுக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சந்தோஷ் சுப்ரமணியன், வேலாயுதம், சச்சின் உள்பட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. மும்பை நடிகையான இவர், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், மூத்த மகன் ரியானுக்கு 5வது பிறந்த நாளை கொண்டாடிய ஜெனிலியா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்பான ரியான், ஒவ்வொரு பெற்றோரும் அவன் வளர வேண்டாம். இப்படியே இருக்கட்டும் என்று கூறுவார்கள். நான் அப்படியல்ல, உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் ரசிக்க விரும்புகிறேன். நான் உனக்கு பறக்க இறக்கைகள் கொடுத்து, அந்த இறக்கைகளுக்கு அடியில் காற்றாக இருக்க விரும்புகிறேன்.

நீ நல்ல இளைஞனாக வளர்வதை பார்க்க விரும்புகிறேன். நீ கடுமையானவன். எப்போது என்ன நடந்தாலும் உன்னை நம்ப வேண்டும். நான் எப்போதும் உன்னை நம்புகிறேன். வாழ்க்கை கடினமானது என்று நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன். அதோடு, நான் விரும்புவதை தவிர வேறு ஒன்றையும் உனக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அது என்னவெனில் நான் உன்னை நேசிக்கிறேன். நீ எனக்கு கிடைத்த மிகப்பெரிய விசயம். என்னை அம்மாவாக்கிய சிறு பையனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- என் முதல் பிறப்பு – என்றும் அந்த பதிவில் ஜெனிலியா தெரிவித்துள்ளார். இந்த கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.
Eelamurasu Australia Online News Portal