தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, என்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஜினியுடன் ‘தர்பார்’, சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, விஜய் சேதுபதியுடன் ‘கடைசி விவசாயி’ என யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. கதையின் நாயகனாக ‘மண்டேலா’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே ‘சத்யம்’ இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் யோகிபாபு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த பெண் யோகிபாபுவின் வருங்கால மனைவி என்றும் செய்திகள் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் யோகி பாபு ட்விட்டர் பக்கத்தில், ‘என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி.’ என்று பதிவு செய்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal