ஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதிகளுக்கு செல்ல விரும்பும் திறன்வாய்ந்த வெளிநாட்டினருக்கான ‘Skilled Employer-Sponsored Regional, Skilled Work Regional’ என்னும் இரண்டு புதிய விசாக்களை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
புதிய விசாக்கள்
1. பணி வழங்குபவர்கள் மூலம் திறன்வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் விசா
(Skilled Employer-Sponsored Regional)
2. திறன்வாய்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலிய உள்ளூர் அரசுகள் அல்லது பிராந்திய ஆஸ்திரேலியாவில் பணியாற்ற தகுதியுடைய குடும்ப உறுப்பினர் பரிந்துரை அடிப்படையில் விசா (Skilled Work Regional)
பிராந்திய பகுதிகள் என்றால் என்ன?
ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்பேன் தவிர்த்து பிற பகுதிகளை வெளிநாட்டினர் இடம்பெயருவதற்கான பிராந்திய பகுதிகளாக வரையறுத்து இருக்கின்றது ஆஸ்திரேலிய அரசு.
பயன்கள்:
*Medicare எனும் ஆஸ்திரேலியாவின் மருத்துவ உதவி திட்டம் பிராந்திய பகுதிகளுக்கு இடம்பெயரும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படுகின்றது.
*குழந்தைகளுக்கு பொதுக் கல்வி.
இந்த நிலையில், முன்பு 23 ஆயிரமாக இருந்த பிராந்திய விசாக்களின் எண்ணிக்கை தற்போது 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த குடியேற்ற எண்ணிக்கை ஆண்டுக்கு 160,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த எண்ணிக்கை, 190,000 இருந்தது.
பிராந்திய விசா மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய பகுதிகளில் மூன்றாண்டுகள் ஒரு வெளிநாட்டினர் வசிக்கும் பட்சத்தில், அவர் நிரந்தரமாக வசிக்கும் விசாவுக்கு தகுதியுடையவராக அங்கீகரிக்கப்படுகிறார். அதே சமயம், நிரந்தரமாக வசிக்க கோரும் பொழுது குறிப்பிட்ட குடியேறியின் குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 53,900 ஆஸ்திரேலிய டாலர்களாக இருக்க வேண்டும்.
முன்பு நடைமுறையில் இருந்த விசா பிரிவுகள் 489 &187 (Regional Sponsored Migration Scheme) ஆகியவை ரத்து செய்யப்பட்டு, பிராந்திய விசாக்களுக்கான 491மற்றும் 494 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன