வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் இருந்து பழுதடைந்த நிலையில் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக ஓமந்தை காவல் துறையினர் தெரிவித்தனர்.
நேற்றையதினம் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியினை துப்பரவாக்கிய காணியின் உரிமையாளர்கள் மண்ணில் புதையுண்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்தனர். குறித்த விடயம் தொடர்பாக ஓமந்தை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த காவல் துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் நீதி மன்ற உத்தரவினை பெற்று இன்றையதினம் அவற்றை அகற்றவுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் இருந்து மூன்று மகசின்கள், மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியனவே காவல் துறையால் மீட்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal