இன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் கடந்த 16 ஆம் திகதி கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்படவில்லை என நிதியமைச்சும் பிறிமா நிறுவனமும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.