யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களுள் ஒருவரான பெருமாள் இயற்கை எய்தியுள்ளார்.
தமிழ் ஊடகப்பரப்பில் ஒரு ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட பெருமாள் ஈழநாடு பத்திரிகை ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழநாடு பத்திரிகையை தொடர்ந்து அது மூடப்பட்ட பின்னராக உதயன் நாளிதழில் இவரின் பங்கு முக்கியமானது.
இளம் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்த அவரை யாழ். ஊடக அமையம் வாழும் போதே கௌரவித்திருந்தது.
Eelamurasu Australia Online News Portal