பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு உங்களிடம் மீண்டும் எனது கோரிக்கையை கடிதம் மூலமாக முன்வைக்கின்றேன். இது தொடர்பில் தீர்க்கமான முறையில் சிந்தித்துப் பார்க்குமாறு உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். நீங்கள் இது தொடர்பில் தெரிவிக்கவுள்ள பதிலை நானும் பொதுமக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்று எதிரணி வேட்பாளர் கோத்தாவிடம் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் நேற்றைய தினம் பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமது அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இம்மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் மக்கள் தமது வாக்குகளை அறிவுபூர்வமாகவும் ஆழமாக சிந்தித்தும் அளிப்பதற்கு நாம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென நம்புகிறேன்.
எமது கொள்கைகள்இ திட்டங்கள் என்பவற்றை மக்களுக்கு மிகவும் தர்க்க ரீதியாக முன்வைப்பதற்கு பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு உங்களுக்கு நான் அண்மையில் அழைப்பு விடுத்தேன். துரதிஷ்ட வசமாக உங்கள் தரப்பிலிருந்து எனக்கு இன்னும் விவாதம் தொடர்பான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அதற்காக உங்களிடமிருந்து ஒரு பதில் கிடைக்கும் வரை நான் காத்திருக்கிறேன். நவீன ஜனநாயக கட்டமைப்பில் உலக நாடுகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் எந்தவிதமான தடுமாற்றமுமின்றி தமது கொள்கைகள் தொடர்பாக நேரடியான விவாதங்களின் பங்கேற்கின்றனர். தற்போது அது போன்ற விவாதங்கள் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படுகின்றன.
உங்களுக்கு இது தொடர்பில் எழுத்து மூல அழைப்புக்கு கிடைக்கவில்லை என ஒருசிலர் கூறிவருகின்றனர். தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் முறைமை பரந்து பட்டு காணப்படுகின்ற ஒரு சமூகத்தில் உங்கள் தரப்பினர் இந்த இவ்வாறான விடயத்தை முன்வைக்கின்றனர்.
எனவே உங்களிடம் மீண்டும் எனது கோரிக்கையை இந்த கடிதம் மூலமாக முன்வைக்கின்றேன். எமது தாய்மண் தொடர்பாக நீங்கள் வகிக்கும் கொள்கை என்ன? உங்கள் கொள்கை தொடர்பாக நான் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளேன். என்பவை தொடர்பாக பகிரங்க விவாதத்தில் மக்களுக்கு தெ ளிவு கிடைக்கும். எனவே இது தொடர்பில் தீர்க்கமான முறையில் இதை சிந்தித்துப் பார்க்குமாறு உங்களிடமும் உங்கள் ஆலாசகர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். நீங்கள் இது தொடர்பில் தெரிவிக்கவுள்ள பதிலை நானும் பொதுமக்களும் மிகவும் அவதானத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .