தியாக தீபம் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ் வேளையில் தியாக வேள்வியில் திலீபன் தன்னை ஆகுதியாக்கிய பன்னிரண்டாவது நாளான இன்று திலீபன் அவர்களின் நினைவுத்தூபி விசமிகளால் தர்க்கப்பட்ட அதே இடத்தில் ஜனநாயக போராளிகளால் நினைவு கூரப்பட்டது.
ஜனநாயக போராளிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஜானம் ,வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் ,வடமாகாணசபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி , தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ.ஆனந்த சங்கரி ,இளைஞர்கள்,தாய்மார்கள் ,மழலைகள்மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
Eelamurasu Australia Online News Portal
