சூர்யா நடிப்பில் இயக்கிய அஞ்சான் படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சண்டக்கோழி-2 படத்தை லிங்குசாமி இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், பின்னர் அவருக்கும், விஷாலுக்குமிடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தனது அடுத்த படத்தை லிங்குசாமி இயக்கயிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
அதனால் அந்த படத்திற்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி.
இந்த நிலையில், லிங்குசாமி எழுதிய லிங்கூ-2 என்ற கவிதை தொகுப்பு மூன்று மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
முதலில் அவர் எழுதிய லிங்கூ என்ற கவிதை தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் லிங்கூ-2 என்ற லிங்குசாமியின் இன்னொரு கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது. தமிழில் எழுதிய இந்த தொகுப்பினை தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட, மொழி பெயர்க்கும் பணிகள் நடக்கிறது.
Eelamurasu Australia Online News Portal