மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்துக்கு பிரபல பாலிவுட் நடிகை கஜோல் முன்னுரை எழுதியிருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை ஸ்ரீதேவி: தி எடர்னல் ஸ்கிரீன் தேவி என்ற புத்தகத்தை எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான சத்யார்த் நாயக் எழுதியுள்ளார். இதற்கான அனுமதியை தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரிடம் பெற்ற பின்பே எழுதியிருக்கிறார்.
இந்த புத்தகத்துக்கு இந்தி நடிகை கஜோல் முன்னுரை எழுதியுள்ளார். உலகெங்கிலும் உள்ள ஸ்ரீதேவியின் ரசிகர்கள் இந்த புத்தகத்தை விரும்புவார்கள் என்று கஜோல் கூறியுள்ளார். மேலும், இது குழந்தை நட்சத்திரமாக இருந்து இப்போது வரை அழியாத புகழுடன் இருக்கும் ஸ்ரீதேவியின் ஐம்பது ஆண்டு கால பயணத்தை எழுத்தாக கொண்டு வந்திருக்கிறது என்றார்.

கஜோல் இது குறித்து மேலும் கூறும்போது, “நான் ஸ்ரீதேவியின் படங்களையும், அவரது ஸ்கிரீன் – மேஜிக்கையும் பார்த்து தான் வளர்ந்தேன். எப்போதும் நான் அவரது ரசிகை” என நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal