நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் அவர்களது திருமணம் டிசம்பர் 25-ந் திகதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சிலர் அவர்களுக்குள் திருமணம் நடந்துவிட்டது அதனால் தான் ஒன்றாக வசிக்கிறார்கள் என்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாதகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை நயன்தாராதான் அருகில் இருந்து கவனித்துக் கொண்டாதாகவும் செய்திகள் வருகின்றன. கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரது திருமணம் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இருவருக்கும் டிசம்பர் 25-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் பரவி வருகிறது. அது இந்து முறைப்படி நடக்குமா, கிறிஸ்துவ முறைப்படி நடக்குமா என்பது வரை கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விக்னேஷ் சிவன் இந்து மதத்தை சேர்ந்தவர். நயன்தாரா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்டமான பார்ட்டி ஒன்றை நடத்தினார் நயன்தாரா. அது கூட திருமணத்திற்கு முந்தைய ஒரு சிறப்பு அழைப்பு என்று சொல்கிறார்கள்.