தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணி இன்று (சனிக்கிழாமை) காலை 10.00 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முன்பாக இருந்தும் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.முற்றவெளியை சென்றடைந்து மாபெரும் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.
இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உரிமை கோசங்களை எழுப்பினர்கள்.
முற்றவெளியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எழுக தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டது. அத்துடன் வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையின் முக்கிஸ்தர்கள் உரையாற்றினார்கள்.
Eelamurasu Australia Online News Portal





