தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நடித்து வந்த புதுமுக நடிகை திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நவ்யா நாயர், காவ்யா மாதவன், நஸ்ரியா நாசிம், பிரியாமணி, பாவனா என பல நடிகைகள் குடும்ப தலைவிகள் ஆகிவிட்டனர். நயன்தாரா போன்றோர் இன்னும் நடித்து வருகின்றனர். மலையாளத்தில் திருமணத்துக்கு பின்னும் நடிகைகளுக்கு நல்ல நல்ல வேடங்கள் வருகின்றன. தமிழில் கேணி படத்தில் நடித்தவர் பார்வதி நம்பியார்.
மலையாளத்திலும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். இவரும் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு கல்யாணத்துக்கு தயாராகிவிட்டார். தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த தகவலை பார்வதி நம்பியரே பகிர்ந்துள்ளார். வினித் மேனனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது என ஒரு வரியில் நிச்சயதார்த்த தகவலை பகிர்ந்து கொண்டவர் நிச்சயதார்த்த படத்தையும் வெளியிட்டுள்ளார். திருமணம் எப்போது என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை.