வடகொரியத் தலைவர் கிம் யொங் உன் தனது நாட்டால் புதிதாக நிர்மாணிக்கப்ப ட்ட நீர்மூழ்கிக் கப்பலொன்றை பார்வையிட்டு அதன் தந்திரோபாய ஆற்றல்கள் மற் றும் ஆயுத முறைமைகளை பரிசோதனை செய்ததாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.அந்த நீர்மூழ்கிக் கப்பலை கிம் யொங் உன் பரிசோதனை செய்யும்போது அவரது உத்தியோகத்தர்கள் அவரருகே நடந்து சென்று அவரால் வழங்கப்பட்ட குறிப்புகளை எழுதுவதில் ஈடுபட்டனர்.
கிம் யொங் உன்னின் விசேட மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பானிய கடல் என அழைக்கப்படும் கிழக்கு கடலில் செயற்படவுள்ளதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கே.சிஎன்.ஏ. தெரிவிக்கிறது.
ஆனால் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் எத்தகைய ஆயுதங்கள் உள்ளன என்பது தொடர் பில் அந்த ஊடகம் விபரம் எதனையும் வெளியிடவில்லை.
இதன்போது கிம் யொங் உன் மேற்படி நீர்மூழ்கிக் கப்பல் அமைக்கப்பட்டுள்ள விதம் குறித்து பெரும் திருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்கள் கடலால் சூழப்பட்ட நிலையிலுள்ள நாடு என்ற வகையில் தேசிய பாதுகாப்பில் செயற் பாட்டுத் திறனும் நீர் மூழ்கிக் கப்பல்களும் முக்கியத்துவம் வகிப்பதாக கிம் யொங் உன் தெரிவித்தார்.
வடகொரியாவானது நீர்மூழ்கிக் கப்பல் கள் உள்ளடங்கலான கடற்படை ஆயுத வசதிகளை அபிவிருத்தி செய்வதில் தொட ர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளதாக அவர் மேலும் கூறினார்.