பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நடிகர் கதிர், காமெடி நடிகர் சூரியுடன் இணைந்து சர்பத் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பிறகு கதிர் தற்போது விஜய்யுடன் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘சர்பத்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’ படத்தை பிரபாகரன் இயக்கி வருகிறார்.
இதில் கதிர் உடன் முதல் முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் நடிக்கிறார்கள்.

நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி என்டர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் பிரபாகரன். எடிட்டராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசை அமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்பட பல படங்களில் பணியாற்றிய குமார் இப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்று வட்டாரங்களிலும், ஒருசில முக்கிய காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal