22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கான ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் தேர்வாகியுள்ளது.
ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த படம் ‘சர்வம் தாள மயம்’. இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இந்நிலையில் இந்த படம் 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஜூன் 15 முதல் ஜூன் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும் இதே திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா, துல்கார் சல்மான் உள்பட பலர் நடித்த ‘நடிகையர் திலகம்’ திரைப்படமும் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal